SuperTopAds

நாடு வழமை நிலை ஏற்பட்டு 5 வாரங்களின் பின்னரே தேர்தல்!

ஆசிரியர் - Admin
நாடு வழமை நிலை ஏற்பட்டு 5 வாரங்களின் பின்னரே தேர்தல்!

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய பின்னர் ஐந்து வார காலஅவகாசம் தேவை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தும் தினம் குறித்து தேர்தல் ஆணைக்குழு இதுவரை தீர்மானிக்கவில்லை.தேர்தல் நடத்தப்படும் தினம் எனக் கூறி பல்வேறு வதந்திகள் பரவி வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து நிலைமைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.