SuperTopAds

தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை!

ஆசிரியர் - Admin
தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை!

பாராளுமன்றத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) இற்கு அமைய, ஜனாதிபதி நிர்ணயித்த திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாவிட்டால், மற்றொரு திகதியை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எனும் தலைப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.