ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி நாட்டை நாசமாக்கபோகிறீர்கள்..! மருத்துவ அதிகாரிகள் சங்கம், தொற்று நோய் தடுப்பு பிரிவு ஜனாதிபதியுடன் நேரடி மோதல்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி நாட்டை நாசமாக்கபோகிறீர்கள்..! மருத்துவ அதிகாரிகள் சங்கம், தொற்று நோய் தடுப்பு பிரிவு ஜனாதிபதியுடன் நேரடி மோதல்..

இலங்கை இன்றும் கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருக்கிறது. இந்நி லையில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது நாட்டை ஆபத்தில் தள்ளும் ஒரு செயற்பாடு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியை மீண்டும் எச்சரித்துள்ளது. 

20ம் திகதிக்கு பின்னர் இடர் வலயங்கள் தவிர்ந்த நாட்டின் 19 மாவட்டங்களில் ஊரடங் கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் பிரயத்தனம் எடுத்திருக்கின் றது. இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் தேசிய தொற்று

நோய் தடுப்பு பிரிவு ஆகியன கடுமையாக அரசாங்கத்துடன் முரண்பட தொடங்கியி ருக்கின்றது. இந்நிலையில் அரச மருத்துவ அதிகரிகள் சங்கம், தொற்றுநோய் தடுப்பு பிரிவு ஆகியவற்றிற்கும் அரசாங்கத்திற்கு இடையில் 

மாறுபட்ட கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றது. கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நிலையில் நாளாந்தம் நோயாளர்கள் 

அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு சட்டத்தை தளர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆகவே இது குறித்த மருத்துவ அதிகாரிகளின் நிலைப்பாடு என்னவென என்னவென விமவியபோது 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே கூறுகையில்,கொரோனா தோற்றுநோய் குறித்த பரிசோதனைகள் முடிந்த பின்னர் அதன் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே 

அடுத்த வாரம் நாட்டில் ஊரடங்கை தளர்க்க முடியுமா அல்லது மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமா என்பதை கூற முடியும்.இப்போது வரையில் கொரோனா தொற்றாலர்களாக இருக்கலாம் 

என சந்தேகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் சகலரும் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் நோயாளர்கலா அல்லது ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களா என கண்டறியப்பட்டு, 

அவ்வாறு அவர்கள் நோயார்கள் என்றால் அவர்கள் இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் இருந்தவர்கள், அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய நபர்கள் யார் என்பதை கண்டறிந்து, படிப்படியாக 

நாட்டினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும். நாளாந்தம் செய்யும் பரிசோதனைகளில் தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஆகவே பரிசோதனைகளை ஒருபோதும் கைவிட முடியாத நிலைமை உள்ளது.

ஆகவே உடனடியாக நாட்டில் ஊரடங்கு சட்டத்தை நீக்கி மக்களை ஒன்றுகூட இடமளிக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. இதனை நாம் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். 

நாட்டினை நாசமாக்க எம்மால் இடமளிக்க முடியாது என்றார்.தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் தீபா கமகே இது குறித்து கூறுகையில், நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுநோய் தாக்கத்தில் எவரேனும் 

பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய துரித பரிசோதனை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் 

அதிக பரிசோதனை மையங்களை அமைத்து அதிகளவில் மக்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வெளி மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் இருந்து இதே முறைமையிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

அடுத்த வாரமளவில் நாம் முன்னெடுக்கும் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அவதானித்தே நாட்டில் நோய்த்தாக்கம் எந்த மட்டத்தில் பரவியுள்ளது என்பது குறித்த ஒரு பொதுவான தீர்மானத்திற்கு வர முடியும். 

இப்போதுள்ள நிலைமையில் நாட்டின் சுகாதார தன்மைகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் சரியாக இருந்தாலும் கூட நாடு தொற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை எம்மால் கூற முடியாது. 

எனவே ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட வேண்டும் என எம்மால் இப்போது அறிவுரைகளை கூற முடியாது. ஊரடங்கு சட்டத்தை தளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாம் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தால் 

அதனால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றால் மீண்டும் நாம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இரண்டாம் கட்ட தாக்கம் நாம் நினைத்ததை விடவும் மோசமாக அமையலாம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து எமது நடவடிக்கைகளை 

ஆரம்பிக்க நேரிடும். எனவே எமக்கு சற்று கால அவகாசம் தரவேண்டும் எனவும், நிலைமைகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர் அரசாங்கம் நடவடிக்கை ஏதேனும் எடுக்க முடியும் என்றார். 

அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சுகாதார மற்றும் சுதேச வைத்தியர் அமைச்சர் பவிர்தா வன்னியாராச்சி இது குறித்து கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் இருப்பது உண்மையே. ஆனால் அதற்கான நாளாந்தம் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து நாட்டினை முடக்கத்தில் வைத்திருந்து நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் 

என நாம் ஒருபோதும் நம்பவில்லை. சமூகத்தில் இந்த நோய் பரவல் இப்போது தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகின்ற நிலையில் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டிய காலம் வந்துள்ளது 

என்றே அரசாங்கம் கருதுகின்றது. அடுத்து வரும் ஒரு சில நாட்களில் நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படும் என நம்புகின்றோம். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தும் வருகின்றோம். 

சுகாதார பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக்கொண்டு மக்களை தமக்கான இடைவெளிகளை கடைபிடிக்க வலியுறுத்தி அதி நேரத்தில் நாளாந்த வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றே நம்புகின்றோம் என்றார். 

தேர்தல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுக்க தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு