5 ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை..! சமுர்த்தி அலுவலர் மீது தாக்குதல்..
5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை தனக்கு வழங்கப்படவில்லை. என கூறி சமுர்த்தி அலுவலர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சமுர்த்தி உத்தியோ கஸ்த்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மாத்தளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப் படும் 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மரக்கறிகளை வழங்கிவிட்டு திரும்பிக் கொ ண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
கொலவெனிகம கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வைத்து நேற்று 3.30 மணியளவில் உதவித் தொகையையும் மரக்கறி விதைகளையும் கொடுத்துவிட்டு வரும்போது உதவித்தொகைபெற்ற பெண்மணி ஒருவரின்
சகோதரனால் சமுர்த்தி அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.தனக்கு 5 ஆயிரம் கொடுக்கவில்லை என்று கூறியே தன்னை குறித்த நபர் பொல்லால் தாக்கியுள்ளதாக 48 வயதுடைய நாகொடகமகே ஜனசந்த சமுர்த்தி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து குடகலஹேன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபர் தெனியாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.