மே 11ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டாம்..! அரசுக்கு நெருக்கடி கொடுக்கும், ஆசிரியர் சங்கம், தொற்றுநோய் தடுப்பு பிரிவு..

ஆசிரியர் - Editor I
மே 11ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டாம்..! அரசுக்கு நெருக்கடி கொடுக்கும், ஆசிரியர் சங்கம், தொற்றுநோய் தடுப்பு பிரிவு..

இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளையும் மே மாதம் 11ம் திகதி ஆரம்பிக்க அர சாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில், பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டாம். எ ன இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. 

இது குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க மேலும் கூறுகையில், தொற்றுநோயியல் நிபுணர்கள் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைகழகங்களை 

மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பிப்பது தொர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டு் என கூறப்பட்டுள்ளது. கொரொனா தொற்றாளர்கள் தொகை 244 ஆக உயர்ந்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 

எதிர்வரும் மே மாதம் முதல் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்க்கமான நாட்களாக இருக்கும் என அறிவித்துள்ளது எனவே பாடசாலைகளை ஆரம்பிக்க அவசரப்பட தேவையில்லை என குறிபபிட்டுள்ளார்.

இதேவேளை ஊரடங்கை தளர்த்த அவசரம் வேண்டாம் முடிவு தவறானால் நிலைமை பயங்கரமாகும் என அரசிடம் தொற்றுநோய் தடுப்பு பிரிவு கோரியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு