SuperTopAds

கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை வீழ்ச்சி..! மேலும் வீழ்ச்சியடையும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மகிழ்ச்சி..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை வீழ்ச்சி..! மேலும் வீழ்ச்சியடையும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மகிழ்ச்சி..

இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகத்திற்கிடையில் பரவுவது மிக குறைந்துள்ளதாக கூறியி ருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க, அடையாளப்படுத்தப்படும் நோயாளர் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்று செவ்வாய்கிழமை மாத்திரம் 15 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இறுதியாக யாழ்ப்பாணம் - பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தே 

நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். கிளிநொச்சி மற்றும் சுதுவெல்ல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும் நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். இதனை எம்மால் மேலும் குறைக்க முடியும்.

கடந்த ஐந்து நாட்களுக்குள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டு நோயாளர்களாக வெளியேறுகின்றமை குறைவடைந்துள்ளது. இவ்வாறான நோயாளர்களின் வைரஸ் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. 

அதாவது வைரஸ் தொற்று காணப்பட்டாலும் அதன் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.சமூகத்திற்கிடையில் வைரஸ் பரவல் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது என்றார்.