ஊரடங்கு சட்டவேளையில் மதுபோதையில் அட்டகாசம்..! அமைதியாக இருக்க சொன்ன அயல்வீட்டார் மீது வாள்வெட்டு, அண்ணன் காயம், தம்பி பலி..
புத்தாண்டு தினமான நேற்றிரவு இடம்பெற்ற விருந்தில் மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அடிதடியில் முடி ந்த நிலையில் அண்ணன் படுகாயமடைந்துள்ளதுடன், தம்பி படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த சம்பவம் ஹெப்பித்திகொலாவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. வீடு ஒன்றில் மது விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அதிக சத்தம் காரணமாக அயல் வீட்டுக்காரர்
மது விருந்தில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளார். இதன்போது ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அயல் வீட்டைச் சேர்ந்த 24 வயதுடைய
ஜெ.செலிட்டர் என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதுடன், கைகலப்கை தடுக்கச் சென்ற மரணித்த இளைஞனின் அண்ணனான 34 வயதுடைய ஜெ.விஜயசுந்தரம்
என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த கைகலப்பு சம்பவம் தொடர்பில் கெப்பற்றிபொலவ பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.