மகிழ்ச்சியும், பெருமையும்..! இலங்கையில் கெரோனா தொற்றுக்குள்ளான 4 மாத சிசு 13 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பியது..!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 4மாத குழந்தை பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் மருத்துவமனை இன்று அறிவித்துள்ளது.
தொற்று கண்டறியப்பட்டு 13வது நாளில் இக்குழந்தை குணமடைந்து வெளியேறியுள்ளது. புத்தளம் – நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த
அந்த குழந்தையின் குடும்பத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.