இ.போ.ச பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய அம்புலன்ஸ்..! குழந்தை, தாதியர்கள் உள்ளடங்கலாக 7 பேர் படுகாயம்..
இ.போ.ச பேருந்து ஒன்றும் அம்புலன்ஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரத்தினபுரியிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸூம் தேசிய வைத்தியசாலையிலிருந்து
மாத்தறை நோக்கி தாதியர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸூம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் அம்பியுலன்ஸிலிருந்த
சிறு குழந்தையொன்று உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை.
என பொலிஸார் குறிப்பிட்டனர்.விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.