2 வாரங்களின் பின் கொரோனாவிலிருந்து நாடு மீண்டெழும்..! மக்களின் ஒத்துழைப்பை கேட்கிறார் சுகாதார அமைச்சர்..
இலங்கையில் இன்னும் கொரோனா தொற்றுள்ளவர்கள் இருப்பின் அடுத்த 14 நாட்களுக்குள் அவர்களை கண்டறிய முடியும் என கூறியிருக்கும் மத்திய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி,
சுகாதார அமைச்சு தற்போது எ டுத்தற்ற நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து 2 வாரங்களின் பின் பாதிப்பற்ற நாடாக எம்மால் மீள்ச்சியடைய முடியும் எனவும் கூறியிருக்கின்றார்.
நாட்டில் தற்போதுள்ள கொரோனா நிலமைகள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாம் கொரோனாவுக்கு பழக்கப்பட்டவர்கள் அல்ல. வரலாற்றில் இப்போது தான் அதனை சந்திக்கிறோம். எங்களுடைய மருத்துவர்கள் மக்களை பாதுகாக்க போராடுகிறார்கள்.
180 வரையிலான நோயாளர்களை இதுவரை அடையாளம் கண்டிருக்கின்றோம். இனினும் நோயாளர்கள் இருப்பின் 14 நாட்களுக்குள் நிச்சயமாக கண்டறிவோம்.
அதற்கு தற்போதுள்ள கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை தொடரும், மக்கள் இதுவரை வழங்கிய ஒத்துழைப்பை இனியும் தொடர்ந்து வழங்கவேண்டும்.
அதன் ஊடாக 2 வாரங்களின் பின்னர் நாம் மீள்ச்சியடைவோம் என்றார்.