இலங்கை மயான பூமியாக மாறாது..! நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மஹிந்த, அரசுக்கு ஒத்துழைக்குமாறு மக்களிடம் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கை மயான பூமியாக மாறாது..! நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மஹிந்த, அரசுக்கு ஒத்துழைக்குமாறு மக்களிடம் கோரிக்கை..

நாங்கள் உயிர் வாழப்போகிறோமா? சாகப்போகிறோமா? என்பது நாங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை களுக்கு வழங்கும் ஒத்துழைப்பில் தங்கியிருக்கிறது. என கூறியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிநாடுக களைபோல் இலங்கை மயான பூமியாக மாற இடமளிக்கமாட்டோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார். 

இன்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போ து மேலும் அவர் கூறுகையில், உலக நாடுகள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில், எவ்வித மத, அரசியல் பேதங்களும் இன்றி நிவாரண வேலைத்திட்டகளை 

அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளர் காணப்பட்டவுடன், நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கமும் மக்களும் யுத்தம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகில் 200 க்கு மேற்பட்ட நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகளில் பலியானவர்களை எவ்வாறு மயானங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்பதை அவதானித்து இருப்பீர்கள். நாம் உயிர் வாழ்வதா?இல்லையா? என்பது, குறித்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாம் செயற்படும் விதத்தில் தங்கியுள்ளது. 

குறித்த தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் வருமானம் ஈட்டும் வழிகள் முடங்கியுள்ளன. நாட்டில் குறித்த தொற்று ஒழிக்கப்பட்டதன் பின்னர், முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளை நாம் திட்டமிட வேண்டும். 

வீட்டுத் தோட்டங்களை அமைப்பதன் மூலம் எமக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யலாம் என்றார்.மக்கள் வீடுகளில் இருந்து குறித்த வைரஸ் தொற்றை ஒழிக்க பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், நாடு என்ற ரீதியில் சவால்களுக்கு மத்தியில் நாம் இதனை வெற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு