SuperTopAds

சொகுசு கப்பலில் உயிருக்கு போராடிய ஜேர்மன் நாட்டு பெண்..! நடுக்கடலில் வைத்து மீட்டு மருத்துவ சிகிச்சையளிக்கும் இலங்கை கடற்படை..

ஆசிரியர் - Editor I
சொகுசு கப்பலில் உயிருக்கு போராடிய ஜேர்மன் நாட்டு பெண்..! நடுக்கடலில் வைத்து மீட்டு மருத்துவ சிகிச்சையளிக்கும் இலங்கை கடற்படை..

MSC Magnifica சொகுசு கப்பலில் உயிருக்கு போராடிய 75 வயதான ஜேர்மன் நாட்டு பெண் பயணியை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளதுடன், அவரை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இதய நோயாளியாக இருக்கும் ஜெர்மன் பெண் உடல் நிலை மோசமான நிலையில் கோரிக்கை வைத்ததையடுத்து இலங்கை நபரை கடற்படையினர் பொறுப்பேற்ற சமயம் இந்த பெண்ணையும் கடற்படையினர் சிகிச்சை வழங்குவதற்கு பொறுப்பேற்றுள்ளனர். 

மேலதிக சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார், மேலும் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முறையாக ஜேர்மன் பெண் துறைமுக வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்டார், கப்பலில் பயணிக்கும் எந்தவொரு பயணிகளையும் 

அல்லது குழு உறுப்பினர்களையும் பிற நாடுகள் ஏற்க மறுத்ததால் இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்று கிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.