LOCK DOWN செய்யப்படவுள்ளது கொழும்பு..! பேச்சுவார்த்தைகள் ஆரம்பம், அடுத்து நடவடிக்கையே..
கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்புகளை பேணிய 308 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நபர்களைத் தேடுவதற் கும், நோய் பரவுவதைத் தடுப்பதற்கும் கொழும்பு சில நாட்களுக்கு
கொழும்பினை Lock Down செய்யலாமா என்று உயர் அதிகாரிகள் கலந்துரையாடிவருகின்றனர் என இன்று டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இதுவரை முடிவு உறுதியாகவில்லை. ஆனால் இது குறித்து உயர் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
உரிய உத்தரவுகள் வந்தவுடன் பொலிஸார் கொழும்பை முடக்க தயாராக உள்ளனர்,COVID-19 காரணமாக மருதானையைச் சேர்ந்த ஒரு நோயாளி இறந்ததை அடுத்து,
இதுவரை மருதானையில் சுமார் 2,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு நகர எல்லைக்குள் அடையாளம் காணப்பட்ட COVID-19 நோயாளிகளுடன் தொடர்பு வைத்திருந்த 308 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் அதிகமான நோயாளர்கள் வரக்கூடும் என்று பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர், இந்த நபர்களை விரைவில் அடையாளம் காணவேண்டும்
என தெரிவித்துள்ளனர்.