அதிகாலையில் மேலும் ஒருவர் மரணம்..! கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு..
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், வெலிகந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 44 வயதான நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர் என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்திருக்கின்றது.