11 ஆயிரம் பேரை கைது செய்துவிட்டோம்..! தயவு செய்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். ஜனாதிபதி உருக்கமான வேண்டுகோள்..
மக்களின் பாதுகாப்பான பொறுப்பை ஏற்றுக் கொண்டு நான் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 ஆயிரம் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தயவு செய்து ஒரு குடிமகனாக, ஒரு குடிமகளாக நாட்டினதும், உங்களதும் பாதுகாப்பாக அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள், என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகொள் வருமாவது,
இந்த நிமிடம் வரையான நிலைவர அறிக்கையின்படி - ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 11,000 இலங்கையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது.
முடிந்தவரை வீட்டில் இருப்பதுதான் அது. உங்கள் ஜனாதிபதியாக, உங்கள் பாதுகாப்பின் பொறுப்பை நான் ஏற்றுச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். ஒரு குடிமகனாக, ஒரு குடிமகளாக - உங்கள் கடமையைச் செய்து,
தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைத் தயவுசெய்து பின்பற்றுங்கள்.