இலங்கை இன்றும் பாதுகாப்பாக உள்ளது, சமூகத்திற்குள் கொரோனா பரவவில்லை..! ஆனாலும் அவதானமாக இருப்போம்..!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்படும் நோயாளர்கள் அனைவரும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணியவர்களே. என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
மேலும்,இதுவரை கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவவில்லை என்பதை சுகாதார அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.கொரோனாவை தடுப்பதில் தேசிய புலனாய்வு பிரிவு முக்கியபங்கு வகிக்கின்றது. நோய் தொற்றாளிகள் காணப்பட்ட பகுதிகளில்
உள்ள மக்கள் தேவைப்படும் போது பாதுகாப்பு படைகள், சுகாதார அதிகாரிகளுக்கு போலியான தகவல் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.