கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்..! முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..!

ஆசிரியர் - Editor I
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்..! முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..!

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்யும் விடயம் தொடர்பாக தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு முஸ்லிம் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளதுடன், நான் மருத்துவன் இல்லை. என பதிலளித்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் உடலை தகனம் செய்யவேண்டும். என சர்வதேச நியமங்கள் கூறும் நி லையில் இலங்கையில் உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை கையளிக்குமாறு கேட்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமருடன் தனிமையில் பேச முஸ்லிம் தலைவர்கள் 

கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அந்த கோரிக்கையினை நிராகரித்துள்ள பிரதமர், நான் மருத்துவன் அல்ல. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி நடப்பதற்கு எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என கேட்டிருப்பதுடன், சமயம், சமூகம் என அனைத்திலும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் 

மக்களின் வாழ்வு தொடர்பாக சிந்தித்து சிரமங்களை சகித்துக் கொண்டு செயற்பட அனைவரும் முயற்சிக்கவேண் டும் எனவும் பிரதமர் இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நேரடியாகவே கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு