17ம் திகதி OD185 இலக்க விமானத்தில் மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவர்களால் ஆபத்து..! உடனடியாக உங்களை வெளிப்படுத்துங்கள்..
இலங்கைக்கு கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி மலேசியாவில் இருந்து OD185 இலக்க விமானத்தில் வந்தவர்கள் சக லரும் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும்படி கொரேனா எதிர்ப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திரசில்வா கூறியுள்ளார்.
குறித்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் புத்தளம் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் கட்டாயம் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யு ங்கள். இந்த உத்தரவை மீறினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தேடி கண்டு பிடிக்கப்படுவீர்கள்.
அதற்காக சட்டநடவடிக்கையும் எடக்கப்படலாம். என கூறப்பட்டிருக்கின்றது.