ஜனாதிபதி கோட்டாவுக்கு கிடைத்துள்ள மிக உயர்ந்த வாழ்த்து மற்றும் பாராட்டு..! தொலைபேசி ஊடாக கூறப்பட்டது..
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இலங்கை ஜனாதிபதி மேற்கொண்டிருக்கு ம் துணிச்சலான முற் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபத கோட்டபாய ராஜபக்சவுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறியிருக்கின்றார்.
தொலைபேசி அழைப்பினூடாக தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்ததாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். Covid-19 வைரஸ் பரவலினால் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதாரம்
மற்றும் சுகாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரின் இந்த டுவிட்டர் பதிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிடுவீட் செய்துள்ளார். Covid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் நன்றி தெரிவித்ததாக
குறிப்பிட்டு ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.Covid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.