SuperTopAds

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் மக்களுக்கான புதிய நிவாரண திட்டங்கள்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் மக்களுக்கான புதிய நிவாரண திட்டங்கள்..!

ஜனாதிபதியினால் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு விசேட நிவாரண திட்டங்க ளை கடந்த மாதம் 30ம் திகதி இரவு ஜனாதிபதி எடுத்தள்ளார். அந்த திட்டங்களாவன, 

முதியோருக்கான கொடுப்பனவு பெறும் 416,764 பேருக்கும் முதியவர்களாக இனம்காணப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்டுள்ள 142,345 பேருக்கும் ரூபா 5000/- கொடுப்பனவு வழங்கப்படும்.

அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு பெறும் 84,071 பேருக்கும் அங்கவீனர்கள் என அடையாளம் காணப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ள 35,229 பேருக்கும் ரூபா 5000/- கொடுப்பனவு உரித்தாகும்.

விவசாய காப்புறுதி முறைமையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள 160,675 விவசாயிகளுக்கும் ரூபா 5000/-கொடுப்பனவு உரித்தாகும்.

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு பெறும் 25,320 பேருக்கும், மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 13,850 பேருக்கும் ரூபா 5000/- கொடுப்பனவு வழங்கப்படும்.

கர்ப்பிணி தாய்மார் மற்றும் மந்த போசனையுடைய பிள்ளைகளுக்கான திரிபோஷ மற்றும் வேறு போசனை பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.

சமூர்த்தி கொடுப்பனவு பெறும் 1,798,655 பேருக்கும் மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 600,339 குடும்பங்களுக்கும் ரூபா 5000/-கொடுப்பனவு சமூர்த்தி வங்கிகள், சமூர்த்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் 645,179 பேருக்கு ஓய்வூதிய சம்பளம் வழங்கப்படும்.

அரச ஊழியர்கள் 1,500,000 ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படுவதுடன் சம்பளத்திலிருந்து கடன் தொகை அறவிடப்படுவது மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகள், ட்ரக் வண்டிகள், பாடசாலை பஸ் மற்றும் வான்கள் மற்றும் சுயதொழிலுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கில் உரிமையாளர்கள் உள்ளிட்ட சுய தொழில்களில் ஈடுபட்டுள்ள 1,500,000 பேருக்கு வரி தவணைக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகள் ஜனாதிபதி பணிக்குழாமின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.