நாட்டுக்குள் வந்து சேர்ந்தது கொரோனா வைரஸிற்கான “அவிகன்” மருந்து..!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அவிகன் குளிசைகள் இன்று காலை நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
மேற்படி தகவலை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
இதன்படி, முதற்கட்டமாக 5 ஆயிரம் மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.