அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவரின் மகிழ்ச்சியான செய்தி..! அடுத்தவாரம் முதல் AVIGAN மாத்திரைகள் வழங்கப்படும்..
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிக்சையளிப்பதற்காக ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கும் AVIGAN மாத்திரைகள் சோதனை அடிப்படையில் அடுத்தவாரம் வழங்கப்படவுள்ளது.
மேற்கண்டவாறு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேனா கூறியிருக்கின்றார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருக்கும் பேட்டியிலேயே அவர் மேற்படி தகவலை கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது,
இந்த மருந்து anti-influenza drug எதிர்ப்பு மருந்து ‘AVIGAN’ ஐ பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்த உள்ளது 5,000 ‘AVIGAN மாத்திரைகள் ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து நன்கொடையாக அரசாங்க மருந்தாக்க கூட்டுத்தபானத்துக்கு
நாளை வழங்கப்படும். இது சோதனை அடிப்படையில் நோயாளிகள். COVID-19 வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்த வழங்கப்படும். எனினும் ஒரு முழுமையான மருந்தாக ‘AVIGAN’ ஐ யாரும் எடுக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட நோயாளிக்கு
மருந்து பரிந்துரைக்கலாமா என்பதை மருத்துவர் தீர்மானிக்க வேண்டும். தவிர, இந்த மருந்து உலகளவில் எபோலா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், COVID-19 க்கு மாற்று மருந்தாக பரிந்துரைக்க முடியும், என டாக்டர் குணசேனா கூறினார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் ஒப்புதலுடன் இரு நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு பரிசாக 5,000 மருந்துகளை ஜப்பான் மற்றும் சீனா நன்கொடையாக வழங்குகின்றன என்று டாக்டர் குணசேனா மேலும் தெரிவித்தார்.
வைரஸ் தொற்றுநோயைக் குணப்படுத்த ஒரு முழுமையான தீர்வாக இந்த மருந்து நிரூபிக்கப்பட்டால், கொரோன வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும். அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் இதனை வாங்கும், என்றார்.