ஜனாதிபதி வழங்கியுள்ள அதிரடி உத்தரவு..! கொரோனா கட்டுப்பாட்டு ஜனாதிபதி செயலணிக்கு அதியுச்ச அதிகாரம்..
மக்களை குழப்பி அவர்களுடைய அன்றாட நவடிக்கைகளுக்கு அசௌகரியம் உண்டாக்கும் எந்த வொரு நடவடிக்கையும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்படகூடாது என ஜனாதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கிராமங்களைத் தனிமைப்படுத்தல் ஆகியன அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பிரதேசத்தில்
நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கோரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.