SuperTopAds

கத்தோலிக்க மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை..!

ஆசிரியர் - Editor I
கத்தோலிக்க மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை..!

இலங்கை முழுவதும் கொரோனா அச்சத்தினால் முடங்கியிருக்கும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்களில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த அனைத்து உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளும் இரத்து செய்யப்படுவதாக பேராயர் மல் கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்திருக்கின்றார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையில் அதிகளவானவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடுவது பொருத்தமற்றதொரு செயற்பாடாகும். அதனடிப்படையிலேயே இரத்துச் செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

எனினும், பரிசுத்த வாரமாக கடைப்பிடிக்கப்படும் இந்த வாரத்தில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி, சனி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைகள் அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆராதனைகளின் போது அனைத்து கத்தோலிக்கர்களும் வீடுகளில் இருந்தே தமது சமயக் கடமைகளை நிறைவேற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.