உச்ச பாதுகாப்புடன், சர்வதேச நியமங்களுக்கு அமைய தகனம் செய்யப்பட்டது சடலம்..!
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த தர்மசிறி ஜனானந்தவின் சடலம் உச்ச பாதுகாப்புடன் சர்வதேச நியமங்களுக்கு அமைய கொட்டிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது.
மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் (IDH) கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.
கொரோனா எனும் கொவிட்19 வைரஸ் தொற்றினால் இலங்கையில் இறந்த முதல் நபர் இவராவார்.