ஆபத்தை நோக்கி நகர்கிறது இலங்கை..! இன்று மட்டும் 4 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையி ல் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்ததுபோல் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருப் பதாக மருத்தவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110ஆக (சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 9 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அத்துடன்,
நேற்று வெள்ளிக்கிழமை எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று சனிக்கிழமை 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 195 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
இதேவேளை ஆபத்தான கட்டத்தை நோக்கி இலங்கை நகர்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.