பொதுமக்களுக்கு எச்சரிக்கை..! கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு, பொலிஸார், படையினர் களத்தில்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களுக்கு எச்சரிக்கை..! கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு, பொலிஸார், படையினர் களத்தில்..

நாடளாவியரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் நடமாடவே ண்டாம். என பொலிஸார் மக்களுக்கு எச்சரித்துள்ளனர். 

அபாய வலயங்கள் மற்றும் யாழ்.மாவட்டம் தவிர்ந்த நாட்டின் மற்றய பகுதிகளில் இன்று காலை 6 மணி தொடக்கம் 2 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளிலும், ஊரடங்கு அமுலில் இருந்த பகுதிகளிலும்

பொதுமக்கள் தேவையற்று வீதிகளில் நடமாடியதுடன், தமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டதையும், அரசாங்கம் மற்றும் பொலிஸாரின் வழிகாட்டல்களுக்கு கீழ்படியாமல் நடந்து கொண்டமையும் அவதானிக்கப்பட்டது. 

இந்நிலையில் நாடளாவியரீதியில் திறக்கப்பட்டிருந்த பல்பொருள் அங்காடிகள், தனியார் மருந்தகங்கள் இன்று நண்பகலுடன் இழுத்து மூடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித்திருக்கும் பொலிஸார், 

ஊரடங்கு சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்காக முப்படையினரும் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு