4 வயது சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் எதிரொலி..! கொழும்பிலிருந்துவந்த சிறப்பு படை தாவடியில்..

ஆசிரியர் - Editor
4 வயது சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் எதிரொலி..! கொழும்பிலிருந்துவந்த சிறப்பு படை தாவடியில்..

யாழ்.தாவடி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 300 குடும்பங்களின் குடியிருப்பு பகுதியில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை கொழும்பிலிருந்து வந்த சிறப்புபடை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் அதிரடிப்படையின் குறித்து கிருமி நீக்கல் படையணி இன்று காலையில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். தாவடி பகுதியில் இதற்கு முன்பும் கிருமி நீக்கல் செய்யப்பட்டது.

ஆனாலும் கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் 4 வயதான சிறுமி ஒருவர் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த நடவடிக்கை 2ம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Radio
×