48 மணித்தியாலங்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் கோர தாண்டவமாடும் கொரோனா..! இன்று மாலை 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

ஆசிரியர் - Editor
48 மணித்தியாலங்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் கோர தாண்டவமாடும் கொரோனா..! இன்று மாலை 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டிருக் கும் நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விடயம் சுகாதார மேம்பாட்டு திணைக்களம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிரு க்கின்றது. இதன்படி இன்று மாலை 4.45 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் 

இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளியும் இனங்காணப்படவில்லை. என சுகாதார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பின் பின்னர் 4 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

சீன பெண் உள்பட 106 நோயாளர்கள் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களி ல் 6 பேர் குணமடைந்துள்ள நிலையில், 100 பேர் சிகிச்சையில் தொடர்ந்தும் உள்ளனர். 

இந்நிலையில் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Radio
×