SuperTopAds

2வது இராணுவ அதிகாரியும், அவருடைய மகனும் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்..! தாய்க்கும் அறிகுறிகள்..

ஆசிரியர் - Editor I
2வது இராணுவ அதிகாரியும், அவருடைய மகனும் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்..! தாய்க்கும் அறிகுறிகள்..

கொரோனா தொற்றுக்குள்ளான இராணுவ கேணல் தர அதிகாரி ஒருவரும் அவருடைய மகனும் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

மேலும் குறித்த கேணலின் தாயும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் காரணமாக கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கு சொந்தமான வேரஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 22 ஆம் தொற்றாளராக இராணுவ மேஜர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் இத்தாலியில் இருந்து வந்தோரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 

தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டவராவார்.இந்த இராணுவ வீரர் 44 பேருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் எனவும் தெரியவந்திருந்தது. 

அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையிலேயே தற்போது மற்றொரு இராணுவ கேர்ணல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு தற்போது தொற்றுக்குள்ளாகியுள்ள கேர்ணல், கொத்தலாவலை பாதுபாப்பு பல்கலைக்கு சொந்தமான வேரஹெர வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

அந்த வைத்தியசாலையில் வைத்து அவருக்கு கொரோனா தொற்றியது எவ்வாறு என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.