சீனா, இத்தாலியை விடவும் மிக திறமையாக கொரோனாவை எதிர்கொண்ட இலங்கை..! மேலும் 4 பேர் பூரண சுகம், விரைவில் வீடு திரும்புகின்றனர்..

ஆசிரியர் - Editor
சீனா, இத்தாலியை விடவும் மிக திறமையாக கொரோனாவை எதிர்கொண்ட இலங்கை..! மேலும் 4 பேர் பூரண சுகம், விரைவில் வீடு திரும்புகின்றனர்..

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் 99 நோயாளிகளில் மேலும் 4 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு கூறியிருக்கின்றது. 

நாட்டில் இதுவரை 102 பேர் (சீனப் பெண் உட்பட) கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் (சீனப் பெண் உட்பட) முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் மேலும் நான்கு பேர் நோய்த் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள நிலையில் வரும் நாள்களில் வீடு திரும்புவர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Radio
×