2.45 மணிக்கு நோயாளர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு..! ஆபத்தை தொட்டது இலங்கை..!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரி த்திருப்பதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அதிகரித்திருக்கின்றது.
மேலும் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று (23) பதிவாகினர்.இதனிடையே, கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் குணமடைந்து நேற்று வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார்.
52 வயதான சுற்றுலா வழிகாட்டியே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.கடந்த 11 ஆம் திகதி நாட்டில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்று நோயாளி இ
வர் என்பது குறிப்பிடத்தக்கது.