இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டது..! மாவட்டங்களுக்கிடையில் பயணிக்கவும் அதிரடி தடை..
இலங்கையில் 25 மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மாவட்டங்களுக்கிடையி ல் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்தி ருக்கின்றது.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்
மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.