SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை இதுதான்..! இராணுவத்தளபதி அதிரடி, களமிறக்கப்பட்டது இராணுவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை இதுதான்..! இராணுவத்தளபதி அதிரடி, களமிறக்கப்பட்டது இராணுவம்..

யாழ்.செம்மணி தேவாலயத்திற்கு ஆராதனைக்காக வருகைதந்த மதபோதகருடன் 150 தொடக்கம் 180 போ்வரையி ல் தொடா்பில் இருந்துள்ளனா். அவா்கள் தொடா்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றோம். 

மேற்கண்டவாறு இலங்கையின் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலை வருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றாா். 

கடந்த 15ம் திகதி மத ஆராதனை ஒன்றில் கலந்து கொண்டு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதுடன், அவருடன் பழகிய ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானாா். 

இது தொடா்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணையின்போது குறித்த மதபோதகருடன் 150 போ் தொடக்கம் 180 போ் நெருக்கமாக பழகியிருக்கின்றனா். அவா்களை அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும் இராணுவம் தீவிரமான விசாரணை நடவடிக்கையில் களமிறங்கியுள்ளதாக கூறியுள்ளாா்.