SuperTopAds

ஊடரடங்கு சட்டத்தை மீறும் எவா் மீதும் உடன் நடவடிக்கை பொலிஸாா் எச்சாிக்கை..! இதுவரை 30 போ் கைது..

ஆசிரியர் - Editor I
ஊடரடங்கு சட்டத்தை மீறும் எவா் மீதும் உடன் நடவடிக்கை பொலிஸாா் எச்சாிக்கை..! இதுவரை 30 போ் கைது..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவா்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகாித்துள்ளது. 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில், புத்தளம் பகுதியிலிருந்து மன்னாருக்கு கடல்வழியாக தப்பி செல்ல முயன்ற நிலை யில் 20 போ் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தனா். இதேபோல் வவுனியா மாவட்டத்தில் நேற்றிரவ இருவா் 

கைது செய்ப்பட்டிருந்தனா். அதேபோல் பண்டாரவளை பகுதியில் விருந்து ஒன்றில் கலந்துகொண்டவா்களும், ஹப்பத்தளை பகுதி யில் கடையை திறந்து வைத்திருந்தவா்களுமாக 8 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

இந்நிலையில் மொத்தமாக 30 போ் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஊரடங்கை மீறும் எவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸாா் எச்சாித்துள்ளனா்.