ஆபத்தான கட்டத்தை எட்டியது இலங்கை..! 49 நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டனா் நாட்டுக்குள் பதுங்கியுள்ள வெளிநாட்டவா்களுக்கு சிக்கல்..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகாித்திருப்பதாக சுகாதார அமைச்சா் பவித்திரா வன்னியாராச்சி கூறியுள்ளாா்.
அதன்படி நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது (குணமடைந்த சீனப் பெண் உட்பட) 50 ஆக காணப்படுகிறது.
இந்நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்க அரசாங்கம் தீா்மானித்துள்ளது. இதன்படி வெளிநாட்டவா்களை தேடி தேடி பிடிக்கப்படவுள்ளனா்.
குறிப்பாக புத்தளம் பகுதியில், சிலாபம், நீா்கொழும்பு பகுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டவா்களை பிடிப்பதற்காக அந்த பகுதிகளில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.