மிகப் பெரும் ஆபத்தை நோக்கி நகரும் இலங்கை..! புத்தளம், நீா்கொழும்பு, சிலாபம் பகுதிகளுக்கு ஊரடங்கு..
இலங்கையின் புத்தளம் பகுதியில் கொரோனா அச்சுறுத்தல் அதிகாித்திருக்கும் நிலையில் அரசா ங்கத்தின் அதிரடி தீா்மானமாக குறித்த பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிவரையி ல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.
புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு கொச்சிக்கடை உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள புத்தளம் மாவட்டத்தை
முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த அதிகமானவர்கள் புத்தளத்தில் காணப்படுகின்றமை காரணமாகவே
இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.