அரச மருத்துவ அதிகாரிகளின் கோரிக்கை ஏற்பு, 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்தது அரசு..!
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உணரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் செவ்வாய், புதன், வியாழன், ஆகிய 3 நாட்களுக்கு அரசாங்கம் பொதுவிடுமுறை அறிவித்திருக்கின்றது.
முன்னதாக ஒரு நாளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறையை ஒரு வாரம் நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியிருந்தது.
எனினும் இதனை ஆரம்பதில் ஏற்கமறுத்த அரசாங்கம்தற்போது 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்திருக்கின்றது.
எனினும் அத்தியாவசிய துறைகள், மாவட்ட செயலகம், வங்கி போன்றன இயங்கும்.