இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பாதிப்பு..! பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 22 ஆக உயா்வு..
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 22 ஆக உயா்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கின்றது.
73 வயது ஆண் தற்போது கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் 212 கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 17 வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 10 தடுப்பு நிலையங்களில் ஆயிரத்து 800 பேர் தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கின்றது.