நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துகிறது அரசு!

ஆசிரியர் - Admin
நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துகிறது அரசு!

நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த அரசு செயற்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.

"வீதிப் போக்குவரத்துச் சேவையில் பொலிஸாருடன் இராணுவப் பொலிஸாரும் இணைத்து கொண்டுள்ளமைக்கான நோக்கம் என்ன?

பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிஸார் வீதிப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இராணுவப் பொலிஸாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள் ஏற்படும்.

நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நிலைப்பாட்டிலேயே இந்த அரசு செயற்படுகின்றது. அதில் ஓர் அங்கமாகவே இந்தச் செயற்பாட்டைக் கருத முடியும்.

அத்துடன், எயார் பஸ் கொள்வனவின்போது இடம் பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நம்பகத்தன்மை அற்றுப்போயுள்ளது.

இந்த மோசடியுடன் மஹிந்த குடும்பத்தினரும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், மஹிந்த தரப்பினர் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டு மக்களை ஏமாற்றியதைப் போன்றதான நடவடிக்கைகளையே இப்போதும் முன்னெடுத்து வருகின்றனர்" என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு