கரன்னகொடவுக்கு எதிரான வழக்கு ஆவணங்களை கோருகிறது ஜனாதிபதி ஆணைக்குழு!

ஆசிரியர் - Admin
கரன்னகொடவுக்கு எதிரான வழக்கு ஆவணங்களை கோருகிறது ஜனாதிபதி ஆணைக்குழு!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கு எதிரான வழக்கின் கோப்புகளை எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி, தம்மிடம் சமர்ப்பிக்குமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த கோப்புகள் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பெற்றுக் கொடுக்கப்பட இருந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளால் அதற்காக மாற்று தினம் ஒன்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பழிவாங்கும் நோக்குடன் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

எனினும் மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் வசந்த கரன்னாகொடவிற்கு 4 சந்தர்ப்பங்களில் அழைப்பாணை வெளியிடப்பட்டிருந்த போதும் அவர் இதுவரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வில்லை.

Radio
×