போா் காலத்தை ஒத்த சோதனைகளும், கெடுபிடிகளும் கஞ்சா கடத்தல்காரா்களை கைது செய்வதற்காம்..!
வடக்கில் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தவே இராணுவ சோதனை சாவடிகள் அமைக் கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவ பேச்சாளா் கூறியிருக்கின்றாா்.
ஓமந்தை, மாங்குளம், புளியங்குளம், புதுாா் போன்ற பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்துகளில் பயணிக்கும் மக்களும் இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தொடா்பாக
பொதுமக்கள் கடுமையான விமா்சனங்களை தொிவித்திருந்த நிலையில் தனியாா் ஊடகம் ஒன்றுக்கு இராணுவ பேச்சாளா் இன்று மாலை கருத்து கூறும்போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
பஸ்கள் மூலம் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதால், போதைப்பொருள் கடத்தற்காரர்களை கைது செய்வதற்காவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார்
இணைந்து விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாகவும், அதன் ஓர் அங்கமாவே A9 வீதியில் பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி சோதனை நடவடிக்கைளின்போது
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். எனினும் இவ்வாறான போதைப் பொருள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றது? அதனை நாட்டுக்குள் கொண்டுவந்தவா்கள் யாா்? எப்படி கொண்டுவரப்பட்டது?
என்பனபோன்ற விடயங்களை விசாாிக்காமல் உண்மையான கடத்தல்காரா்களை கைது செய்யாமல் கண்துடைப்புக்காக இவ்வாறான சோதனை நடவடிக்கைகளும், கைதுகளும் இடம்பெற்றுவருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.