SuperTopAds

15 வயதான இரு சிறுமிகளை வைத்து விபச்சாரம்..! தாய் மற்றும் இரு மகள்கள் கைது, சிறுமிகளை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
15 வயதான இரு சிறுமிகளை வைத்து விபச்சாரம்..! தாய் மற்றும் இரு மகள்கள் கைது, சிறுமிகளை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு..

15 வயதான இரு சிறுமிகளுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 5 பெண்களும் கைது செய்யப்பட்டு ள்ள நிலையில் தாய் மற்றும் இரு மகள்களுக்கு நாவலப்பிட்டி நீதிமன்றம் விளக்கமறியலில் வை க்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

அத்துடன் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு, ஐந்து சந்தேகநபர்களையும் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய வேளை நீதவான் உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, 

நாவலப்பிட்டி பகுதியில் தாயுடன் 29, 24 வயதுடைய பெண்கள் மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக நாவலப்பிட்டி குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.இவ்வாறு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய 

மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று குறித்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.