வெள்ளை வாகனத்தில் கடத்தி துன்புறுத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் எங்கே..? எங்களுக்கு தெரியாது என்கிறது அரசாங்கம்..

ஆசிரியர் - Editor I
வெள்ளை வாகனத்தில் கடத்தி துன்புறுத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் எங்கே..? எங்களுக்கு தெரியாது என்கிறது அரசாங்கம்..

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கையில் உள்ளாரா? வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டாரா? என்பது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அரசாங்கம் கூறியுள்ளது.

வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அவ்வாறு ஏதேனும் முயற்சிகள் எடுத்தால் அதுவும் எமக்கு எதிராகவே மாறும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு 

நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர்களான பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரண இதனை கூறினார்கள். 

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் முறையான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் இதன்போது கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு