புதிய இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
புதிய இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை..!

பொறுப்பேற்றிருக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகளும், பிரதி அமைச்சுக்களும் வரப்பிரசா தங்கள் அல்ல. அவை பெறுமதியான கடமைகள் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியுள்ளார். 

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலேயே அமைச்சு பதவிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் இறுதியில் 

உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.இந்த நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி கோத்தாபய ரஜபக்ச மேலும் தெரிவித்ததாவது;பொதுமக்கள் பெரியளவிலான ஆணையை வழங்கியுள்ளமை பெரும் எதிர்பார்ப்புடனேயே ஆகும். அதனை நினைவில் நிறுத்தி செயற்படவேண்டும். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளுக்கான துறைகள் 

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளன. எமது கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப இது இடம்பெற்றுள்ளது.பதவிகளின் சலுகைகளை கருத்திற் கொள்ளாது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். 

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் மற்றும் பல ஆண்டுகளின் பலனாக மக்களின் எதிர்ப்பார்ப்புகள் இனங்காணப்பட்டுள்ளன. ரயில் சேவைகளை அபிவிருத்தி செய்வது மற்றும் அவற்றை செயற்றிறன் மிக்கதாக கொண்டு நடத்துவது மக்களின் 

பிரதான தேவையாக உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.அதேபோல் நாட்டின் வறுமைநிலையை நீக்க அவதானம் செலுத்த வேண்டும். அரச துறைகளில் வினைத்திறன் அற்ற போக்குகள் இல்லாது செய்யப்படும். 

இதில் அமைச்சர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு தமது பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர்கள் சந்தர்ப்பம், ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அரச துறையை மேம்படுத்துதல், 

பொது மக்களுக்கு சேவை செய்வதற்கான சந்தர்ப்பம் புதிய யுகத்தை உருவாக்குதல் ஆகியன தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த வேலைத்திட்டங்களுக்கு அமைச்சர் பதவி இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் 

ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு