அமொிக்காவை சீண்டும் வடகொாியா..! மீண்டும் ஏவுகணை பாிசோதனை..

ஆசிரியர் - Editor I
அமொிக்காவை சீண்டும் வடகொாியா..! மீண்டும் ஏவுகணை பாிசோதனை..

அமொிக்காவுடன் அணுசக்தி பேச்சுவாா்த்தைகளை நடாத்த தயாராக இருப்பதாக அறிவித்து சில மணி நேரத்தில் வடகொாியா ஏவுகணை ஒன்றை ஏவி பாிசோதனை நடாத்தியுள்ளது. 

இது தொடர்­பான தக­வல்கள் ஜப்­பா­னிய மற்றும் தென்கொரிய அதிகா­ரி­களை மேற்­கோள்­காட்டி பிராந்­திய ஊட­கங்­களில் வெளியிடப்­பட்­டுள்­ளன. 

இந்­நி­லையில் இந்த ஏவு­கணைப் பரி­சோ­தனை குறித்து அமெ­ரிக்­காவும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. வொன்ஸன் துறை­மு­கத்­துக்கு அருகில் நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்­றி­லி­ருந்து 

 ஏவப்­பட்­ட இந்த புக்­குக்சோங் வகையைச் சேர்ந்த ஏவு­கணை சுமார் 450 கிலோ­மீற்றர் தூரத்­துக்கு 910 கிலோ­மீற்றர் உயரம்வரை பய­ணித்து ஜப்­பா­னிய கடலில் விழுந்­துள்ள­தாக 

தென்கொரிய பாது­காப்பு அமைச்சர் ஜியோங் கையோங் டூ தெரி­வித்தார்.அமெ­ரிக்­கா­வுடன் செயற்­படு மட்ட பேச்­சு­வார்த்­தை­களை எதிர்­வரும் 5 ஆம் திகதி 

முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக வடகொரியா அறி­வித்து ஒரு நாளில் இந்த ஏவு­கணைப் பரி­சோ­தனை இடம்பெற்றுள்ளமை குறித்து தென்கொரிய தேசிய பாது­காப்புச் சபை 

கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி மாளி­கை­யான நீல மாளி­கையால் வெளியி­டப்­பட்ட செய்தி கூறு­கி­றது.

அந்த ஏவுகணை ஏவப்­பட்டு இரண்­டாகப் பிள­வ­டைந்து கடலில் விழுந்­த­தாகத் தோன்­று­வ­தாக ஜப்­பா­னிய அமைச்சரவை தலைமைச் செயலாளர் யொஷ் ஹைட் தெரிவித்தார். 

வடகொரியாவானது கடந்த ஜூலை மாதத்திலிருந்து குறைந்தது 7 ஏவுகணைகளை ஜப்பானிய கடலுக்குள் ஏவிப் பரிசோதித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு