SuperTopAds

ஸ்பெயின் சுற்றுலா ஆசையில் 12 ஆயிரம் அமொிக்க டொலா்களை இழந்த பிாிட்டன் தம்பதி..!

ஆசிரியர் - Editor I
ஸ்பெயின் சுற்றுலா ஆசையில் 12 ஆயிரம் அமொிக்க டொலா்களை இழந்த பிாிட்டன் தம்பதி..!

பிாித்தானிய நாட்டு தம்பதியினா் ஸ்பெயின் நாட்டில் உள்ள விடுதி ஒன்றில் தங்குவதற்காக 12 ஆயிரம் அமொிக்க டொலா் பணத்தை போலியான வங்கி கணக்கிலத்திற்கு அனுப்பி ஏமாற்ற மடைந்திருக்கின்றாா்கள். 

முன்கூட்டியே அறையொன்றை பதிவு செய்து கொள்வதற்காக பணம் செலுத்தியிருந்த நிலையில், பின்னர் அது போலியான முகவரி மற்றும் கணக்கிலக்கம் என்று தெரியவந்துள்ளது.

பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் போலியான Airbnb விடுதிக்கு 12,000 அமெரிக்க டொலர் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தமை தெரியவந்துள்ளது.பிரித்தானியாவைச் சேர்ந்த இயன் ஃபெல்த்தம் மற்றும் அவரது மனைவி டெனிஸ் ஆகியோர் 

ஸ்பெயினின் இபிஸா தீவுக்கு சுற்றுலா செல்வதற்காகத் திட்டமிருந்தநிலையில், இணையத்தில் சொகுசு Airbnb விடுதியில் ஒரு அறையை பதிவு செய்தனர்.ஆனால், திட்டமிட்ட தினத்தில் இருவரும் விடுதி இருக்கும் இடத்திற்குச் சென்றபோது 

அவர்கள் பதிவுசெய்த முகவரி போலியானது என்று அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட விடுதியின் ஔிப்படங்கள் அனைத்தும், அவர்கள் சுற்றுலா சென்றிருந்த பகுதியில் உள்ள ஏனைய 

சொகுசு விடுதிகளின் ஔிப்படங்கள் என்று பிரதேச வாசிகள் மூலமாக அறிந்து கொண்டனர். குறித்த தம்பதி தங்களின் சுற்றுலா அசம்பாவிதத்தைப் பற்றி The Sunday Times நாளிதழில் செவ்வியொன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து 

Airbnb இணையத்தளத்தில் குறித்த போலி சொகுசு விடுதியைப் பற்றிய விபரங்கள் அகற்றப்பட்டன. பயணத்துக்கு முன் சில சந்தேகங்கள் இருந்ததாகவும் அது குறித்து Airbnb நிறுவனத்தை நாடியதாகவும் இயன் ஃபெல்த்தம் தெரிவித்தார்.

ஆனால், நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தம் சந்தேகங்களை தீர்க்கவில்லை என்று அவர் தனது செவ்வியில் குற்றம்சுமத்தியிருந்தார். சம்பவத்தைத் தொடர்ந்து Airbnb நிறுவனம் தம்பதியின் பணத்தை மீள வழங்கியுள்ளது.