மீண்டும் கிளம்பும் பூதம்..! 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..? 48 குடும்பங்கள் குற்றச்சாட்டு.

ஆசிரியர் - Editor I
மீண்டும் கிளம்பும் பூதம்..! 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..? 48 குடும்பங்கள் குற்றச்சாட்டு.

குஞ்சுப் பரந்தன்- செருக்கன் கிராமத்தை ஒட்டியதாக அமைக்கப்படும் உப்பளம் மூலம் தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ள நிலையில் அதனை நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் குழப்ப முயற் சிப்பதாக சுமாா் 48 குடும்பங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. 

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தனியார் உப்பு உற்ப்தி தொழிற்சாலையினை குழப்பி தமது வாழ்வாதாரத்தினை சீரழிக்கமுன்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 48 குடும்பங்கள் வாழும் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 

செருக்கன் கிராமத்தில் மீன்பிடி தொழிலினை பிரதான வாழ்வாதாரமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமது தொழிலிற்கு சென்று வரக்கூடிய வகையில் வீதியினையும் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் 

ஏற்படுத்தி தருமாறு பல தடவை கோரி வந்தனர். இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தமக்கு எவ்வித முன்னுற்றமும் நீண்ட காலமாக ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உப்பளம் ஒன்றை அமைப்பதற்கான பகுதியினை பிரதேச செயலகம் ஊடாக தெரிவு செய்யப்பட்டு வந்ததாகவும், அதனை இப்பகுதியில் அனுமதிக்க அனைத்து மக்களும் ஒப்புதல் பெற்ற பின்னரே பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் 

அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களை பலமுறை தொடர்பு கொள்வதற்காக சென்றபோதும் அவர்கள் அலுவலகத்தில்  சந்திக்க முடியாது போனதாகவும் தெரிவித்த பிரதேச மக்கள், 

அதன் பின்னர் இப்பகுதியில் உப்பளம் அமைப்பதற்கான ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயனை தாம் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தனர். எனினும் அங்கயன் இராமநாதன் மக்கள் 

னைவரும் ஒப்புதல் கொண்டால் மாத்திரமே சம்மந்தப்பட்ட நிறுவனத்துடன் தாம் தொடர்பு கொண்டு மேற்கொண்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பேசலாம் எனவும், மக்களை தாம் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு குாரியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மக்கள் சந்திப்பு கடந்த 25.03.2019 அற்கு குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றது, குறித்த சந்திப்பில் தமது அடிப்படை பிரச்சினைகளான வீதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு தீர்வு தரப்பட வேண்டும் எனவும், இங்கு தொழிலிற்காக அம்த்தப்படுவோர் 

வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாக அல்லாமல் இப்பகுதியிலேயே பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதேவேளை குறித்த திட்டம் இங்கு கொண்டுவரப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் 

அப்பொழுதே எதிர்ப்பினை வெளியிட்டு வந்திருந்ததாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் வகையில் குறித்த திட்டம் தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனினால் 

மக்கள் சார்பில் பேசப்பட்டு தீர்வு எட்டப்பட்டதை தொடர்ந்து பணிகள் இடம்பெற்று வருகின்றன.  இந்த நிலையில் அண்மையில் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறித்த பணிகள் தொடர்பில் 

பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், மக்கள் அனைவரினதும் விருப்பத்திற்கு அமைவாகவே குறித்த உப்பளம் அமைக்கப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அன்று அவர் வருகை தரும்போது 

வேறு பிரதேசத்தை சேர்ந்தவர்களை அழைத்த வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்புாது எமக்கான பாரிய பிரச்சினைகள் தீரக்கப்படும் னவும் 40 பேருக்கு அதிகமானோருக்கு 

நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவு்ம, 200 மேற்பட்டோர் தொழிவாய்ப்பினை பெற்றுக்கொள்வார்கள் எனவும் மக்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர். இவ்வாறு குழப்பும் செயற்பாடுகள் மூலம் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் 

மக்களின் வாழ்வாதாரத்தினை இல்லாது செய்யும் வகையிலேயே அவரது செயற்பாடுகள் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமது பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும், தமது வாழ்வாதாரத்திற்குமாக 

குறித்த திட்டத்தினை விரைந்து செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சம்மந்தப்பட்டவர்களிடம் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு