1000 ஏக்கா் நிலத்தை பிடித்து உப்பளம்..! குஞ்சுப் பரந்தன், உருத்திரபுரம், பொிய பரந்தன் கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம்.
கிளிநொச்சி- குஞ்சுப் பரந்தன் பகுதியில் சுமாா் 1000 ஏக்கா் நிலத்தில் தென்னிலங்கையை சோ்ந் த ஒருவா் உப்பளம் அமைத்துவரும் நிலையில், இந்த உப்பளத்தினால் பாாிய பாதிப்பு கிளிநொச் சி மாவட்டத்திற்கு ஏற்படும் என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
குறிப்பாக குஞ்சுப் பரந்தன், உருத்திரபுரம், பொிய பரந்தன் ஆகிய கிராமங்களில் விவசாய நடவ டிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்படும் என கூறும் மக்கள், தங்களுடைய ஒப்புதல் கோரப்ப டாமல் குஞ்சுப்பரந்தன் கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு
கையூட்டல் வழங்கப்பட்டு எதேச்சாதிகாரமாக இந்த உப்பளம் அமைக்கப்படுவதாகவும் அதனை தென்னிலங்கையை சோ்ந்த ஒருவா் அரசியல் செல்வாக்கின் ஊடாக செய்து கொண்டிருப்பதாக வும் மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா். இந்த பகுதியை மக்களின்
கோாிக்கைக்கு அமைவாக கரைச்சி பிரதேசசபை தவிசாளா் அருணாச்சலம் வேழமாழிகிதன் நோில் சென்று பாா்வையிட்டுள்ளாா்.