காணாமல்போனது ஜனாதிபதியின் காலக்கெடு..! கடுப்பான நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்..
தமிழ் மக்களுக்கு உாித்தான காணிகளை 2018ம் ஆண்டு மாா்கழி மாதத்திற்குள் மக்களிடம் மீள வழங்குவேன் என ஜனாதிபதி கூறி 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடா்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மீள்குடியேற்ற நிலமைகள் குறித்து ஆராயப்படுகையில் கருத்து கூறும் போதே நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில், 2018ம் ஆண்டு மாா்கழி மாதத்திற்கு முன்னா் தமிழ் மக்களுக்கு உாித்தான காணி கள் அனைத்தும் மக்களிடமே மீள வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா காலக்கெடு வழங்கினாா். அந் த காலக்கெடு நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையிலும்
படையினாின் கட்டுப்பாட்டில்சுமாா் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்து கொண்டிருக்கின்றது. மேலும் குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் புறமாக பெருமளவு நிலம் தொடா்ந்தும் படையினாின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நிலம் பொதுமக் களுக்கு சொந்தமான மிக பெறுமதியான விவசாய நிலம்.
என சுட்டிக்காட்டினாா். தொடா்ந்து நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறுகையில், பலாலி வீதியின் கிழக்கு புறமாக உள்ள வீதி எ ன்பது மிக பெறுமதியான விவசாய நிலம். அதனை மக்களுக்கு விடுவிக்காமல் படையினா் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ள்ளனா். அதுமட்டுமல்லாமல் மக்களுடைய நிலத்தில் விவசாயம் செய்கின்றாா்கள்.
இது எங்களுடைய பொருளாதார விருத்திக்கு முரணான ஒரு செயலாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் மயிலிட்டி பகு தியில் 3 கிராமசேவகா் பிாிவுகளும், வல்லை அராலி வீதியும் விடுவிக்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டினாா். இதனையடு த்து கருத்து கூறிய நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண ஆளுநா்
ஜனாதிபதியின் வடமாகாணத்திற்கா ன பிரதிநிதி என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் இந்த விடயங்களை கூறி மக்களுடைய காணிக ளை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினாா். அதற்கு பதிலளித்த ஆளுநா் தாம் ஜனாதிபதிக் கு இந் த விடயத்தை நினைவு படுத்துவதாக கூறினாா்.
இதனை தொடா்ந்து யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளப தி கருத்து கூறுகையில் பலாலி வீதியின் கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்க 1200 மில்லியன் பணம் தேவை என கூறியதுடன் அந்த பணம் கிடைக்கவில்லை எ னவும் கூறினாா்.